பொன்சேகாவின் புதிய பதவி இராணுவ சதிப்புரட்சிக்கான அடித்தளமா?

பொன்சேகாவின் புதிய பதவி இராணுவ சதிப்புரட்சிக்கான அடித்தளமா?

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல் ஒன்றில் அரசாங்கம் தோல்வியடைந்தால், இராணுவ சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதாக தாய் நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு படைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது இதனை தெளிவாக புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதிக்கு புதிய பதவி வழங்கப்பட்டால், அவருக்கு இராணுவ சீருடையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல் அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்காது என்பது புரிந்து கொண்டுள்ளதால், அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அஜித் பிரசன்ன மேலும் தெரிவித்துள்ளார்.