Update – புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்..

Update – புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்..

புதிதாக மூன்று பிரதி அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் சற்றுமுன்னர் ஜனாதிபதியின் முன்னாள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்கள்.

இரான் விக்ரமரத்ன, வசந்த சேனாநாயக்க, பாலித ரங்கே பண்டார, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கரு பரணவிதான மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோர் இவ்வாறு புதிய பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள்

இரான் விக்ரமரத்ன – புதிய நிதி இராஜாங்க அமைச்சர் 

லகஷ்மன் யாப்பா அபேவர்தன – அரச தொழில் முயற்சி இராஜாங்க அமைச்சர் 

பாலித ரங்கே பண்டார – நீர்பாசன இராஜாங்க அமைச்சர் 

வசந்த சேனாநாயக்க – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் 

பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி  அமைச்சர்கள்

ஹர்ச டி சில்வா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார துறை பிரதியமைச்சர் 

கரு பரணவிதான – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி பிரதியமைச்சர் 

ரஞ்சன் ராமநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர்

 

(rizmira)