ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலத்தில்

ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலத்தில்

இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் திகதி அனுப்பப்பட்ட அந்த தந்தியில், நாஜிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது தொடர்பாக கோயரிங் அனுமதி கேட்டிருந்தார்.

இத்தந்தியை பெர்லின் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் இருந்து அமெரிக்கப் படையினர் 1945 மே 8-ம் திகதி கைப்பற்றினர். இத்தந்தியை சில ஆவணங்களுடன் கைப்பற்றிய அமெரிக்க கெப்டன் பெஞ்சமின் பிரடின், பின்னர் இதை தனது மகனிடம் கொடுத்திருந்தார்.

அத்தந்தியை அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அலெக்சாண்டர் ஏல நிறுவனம் மூலம், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளார்.  வரலாற்றில் முக்கியத்துவம் பெறாத இந்த தந்தி, ஏலத்தில் மிகுந்த மதிப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.15 லட்சம்) மேல் இது ஏலம் போகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

(riz)