சீனாவை தாக்கவிருக்கும் லிங்பா எனும் அதிவேகப் புயல்

சீனாவை தாக்கவிருக்கும் லிங்பா எனும் அதிவேகப் புயல்

சீனாவை அடுத்தடுத்து இரண்டு அதிவேக புயல் தாக்க இருப்பதால், அந்நாட்டு ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

லிங்பா என்ற புயல் தெற்கு மாகாணமான குவாங்டாங்கை நேற்று தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சான்-ஹொம் என்று சக்தி வாய்ந்த புயல் கடற்கரை பகுதியான புஜியான் அல்லது செஜியாங் பகுதியில் இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு அதிவேக புயலும் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வர்த்த நகரமான ஷாங்காயில் இருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் அனைத்து ரயில்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நிறுத்தப்படுகிறது.

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 15 கவுன்ட்டியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)