விஜய்யை பார்த்தாலே புல்லரித்துவிடும்” -பிரபல நடிகை…

விஜய்யை பார்த்தாலே புல்லரித்துவிடும்” -பிரபல நடிகை…

விஜய் சாரை திரையில் பார்த்தாலே புல்லரித்துவிடும்’ என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள ரீமேக்கான ‘ஜம் ஜம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன். அடுத்து, கவுதம் கார்த்திக் ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மஞ்சிமாவின் பிடித்த நடிகர், விஜய். அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது மஞ்சிமாவின் வாழ்நாள் ஆசை. விஜய்யைப் பற்றி அவரிடம் கேட்டபோது,

“எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் விஜய் சார். அவரை ஸ்கிரீனில் பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும். சின்ன வயதில் இருந்தே அவரைப் பிடிக்கும். சரியாக சொல்லப்போனால் ‘குஷி’ படத்தில் இருந்து இன்றுவரைக்கும் அவர்தான் என்னுடைய ஃபேவரைட்.

அவர் படம் வெளியாகும்போதெல்லாம் முதல் இரண்டு நாட்களுக்குள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விடுவேன். ‘குஷி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘தெறி’ படங்களை அதிக முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது, ‘இந்தப் படத்தில் நான் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருந்திருக்குமே…’ என்று தோன்றும்” என்கிறார் மஞ்சிமா மோகன்.