தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பொதுத் தேர்தலுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொனராகலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது இவ்வாறான நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எஸ். எம். சரத்குமார தெரிவிக்கின்றார் .

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார் .

திணைக்களத்திற்கு கையளிக்கபட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து மின்னஞ்சல் ஊடாக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எஸ். எம். சரத்குமார சுட்டிக்காட்டுகின்றார் .

தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்த கூடிய அங்கீகரிக்கபட்ட ஆவணங்கள் எதுவும் இன்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது.

அதற்கமைய தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஓய்வூதிய அட்டை ,முதியோர் அடையாள அட்டை , மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகியனஅங்கீரிக்கப்பட்ட அடையாளமாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.