இலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி

இலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி

(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் உறுதியாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார்.

போட்டியின் கடைசி நாளான இன்று(18) இலங்கை அணி 135 ஓட்டங்களை எடுத்தால் வெற்றிபெறும்.

இந்த நிலையில், நேற்றைய போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை அணியின் இடைக்கலப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க, கருத்து தெரிவிக்கையில்,

நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது அவர்களுடைய விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது இலகுவான விடயமல்ல என்பதை எமது பந்துவீச்சாளர்களுக்கு சொல்லியிருந்தோம். எதிர்பார்த்ததைவிட அதிகமான ஓட்டங்களைக் குவித்தனர். அவர்களுடைய துடுப்பாட்ட வரிசையில் இறுதிவரை வந்த வீரர்கள் மிகப் பெரிய நெருக்கடியை எமது பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்தனர்.

ஒரு பயிற்சியாளராக எமது பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் ஒருசில இடங்களில் நான் அதிருப்தி அடைகிறேன். தொடர்ந்து மோசமான பந்துகளை நாங்கள் வீசிய அதிகளவு ஓட்டங்களைக் கொடுத்திருந்தோம். என்னைப் பொறுத்தமட்டில் அதுவும் ஒரு கடினமான விடயம் தான்.

இதேவேளை, உண்மையில் பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் விளையாடி, அணிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கின்றார் திமுத் கருணாரத்ன. அணியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றார் என அவர் கூறினார்.