பிரதமர் ரணில் தெற்காசியாவிலேயே முதிர்சி தலைவர் என்பது நிரூபணமானது

பிரதமர் ரணில் தெற்காசியாவிலேயே முதிர்சி தலைவர் என்பது நிரூபணமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தமை பிரதமர் ரணில் தெற்காசியாவில் முதிர்சி உள்ள தலைவர் என்பதை காட்டி உள்ளதாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் தெரிவு செய்யபட்டமையை நாங்கள் வரவேற்கின்றோம். இவரின் இந்த தெரிவின் மூலமாக இந்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் நிலை உறுவாகி உள்ளது. இதற்காக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம். இது அவரின் கடமையை முறையாக செய்வதற்கு ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும்.

இந்த தெரிவினை பல பிரச்சினைகளுக்கும் இழுப்பரிக்கும் மத்தியில் தெரிவு செய்ய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எனது வாழ்த்துக்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெற்காசியாவில் ஒரு முதிர்ச்சி உள்ள தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு விட்டுக் கொடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் நல்லெண்ணத்தை பிரதிபளிக்கும் காரியமாக இதனை நாங்கள் பாராட்டுகின்றோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யபட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.