பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவினை மீளவும் வழங்குவேன் – சஜித் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள குழந்தைகள் 05 வயதை அடைவதற்கு முன்பே அவர்களின் 70% தொடக்கம் 80% மூளை வளர்ச்சி இடம்பெற்று விடுகிறது. நான் திரு.கன்னங்கரா ஆரம்பித்த இலவசக்கல்வி முறையில், வராலாற்றின் முதலாவது பிரதான விரிவாக்கமாக முன்பள்ளிக் கல்வியை இலவசமாகவும், அனைத்துக் குழந்தைகளும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் மாற்றுவேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

நேற்றையதினம் (14) பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையில்,

“..தனது தந்தை ஏழை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தார். எனினும், குறித்த வேலைத்திட்டம் காலப்போக்கில் நிறுத்தப்பட்டாலும், அதனை மீளவும் தான் முன்னெடுத்து பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உயிரூட்டுவேன். மேலும் பாடசாலை சீருடைகள் இரண்டினையும் சேர்த்தே வழங்குவேன்..” என தெரிவித்திருந்தார்.