வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பயணத்தடை

வெனிசுவேலா ஜனாதிபதிக்கு பயணத்தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு 15 நாடுகள் பயணத்தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்ஜென்டினா, பிரேஸில், அமெரிக்கா, கொலம்பியா, சிலி, பெரு உள்ளிட்ட அமெரிக்க நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றன.

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதனை அவர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

இந்தநிலையிலேயே குறித்த நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சந்திப்பு ஒன்றினைத் தொடர்ந்து இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.