PEACE EXPO & COLOMBO FOOD FEST 2019 – உணவு திருவிழா நாளை

PEACE EXPO & COLOMBO FOOD FEST 2019 – உணவு திருவிழா நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – Peace Expo & Colombo Food Fest 2019 நிகழ்வானது டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதி கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. Peace Expo 2019, புதுமையான இரண்டு நாள் நிகழ்வென்பதுடன், ஐ.நா. பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் செயற்திட்டத்தின் பிரச்சார நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்நிகழ்வை மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை (SDG) மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள The Road to Rights என்ற அமைப்பு நடாத்தவுள்ளது. மேலும் Peace Expo 2019 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் வாய்ப்பை வழங்கவுள்ளது. எனவே, இது ஒரு இலாப நோக்கற்ற கண்காட்சியாகும், இங்கு தன்னார்வத்தை கொண்டாடுவதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்கும், உலகளாவிய இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதற்கும் அனைத்து பங்குதாரர்களும் ஒரே குடையின் கீழ் அழைத்து வரப்படவுள்ளனர். இந்த நிகழ்வு நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) தொடர்பான சிக்கல்களை கலந்துரையாடுவதற்கான அவையாக செயற்படவுள்ளதுடன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கான (SDG) ஊடக வலயமானது ஏனைய சமூக பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்கவுள்ளது.

கொழும்பில் உணவு திருவிழா

இந்த முயற்சியின் ஓர் அங்கமாக Road to Rights அமைப்பானது ‘SDG Celebrity Ambassador Program’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதுடன், ஒவ்வொரு தூதுவரும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியளிக்கவுள்ளதுடன், 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளனர். நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான அறிவை அதிகரிக்க தேவையான ஆதரவைத் திரட்டுவதில் ஒரு பிரபலம் சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும், எனவே இவர்கள் சமூகத்தில் மாற்றத்தின் ஊக்கியாக செயல்படுவார்கள்.

Peace Expo 2019 2019 இற்கு இணையாக நடைபெறும் உணவுத் திருவிழாவானது இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இணைந்து கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பலவகையான உணவுகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளன. மேலும், இது இளைஞர்களால் வழிநடாத்தப்படும் Road to Rights அமைப்பின், www.roadtorights.org இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவை மற்றும் இலங்கையில் ஐ.நா.வின் SDG Action Campaign திட்டங்கள் போன்ற எதிர்கால திட்டங்களுக்கு உதவியளிக்கும் நிதி சேகரிக்கும் திட்டத்தின் அங்கமாகும்.

Peace Expo 2019, ஊடாக நாம் இளைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்க ஒரு தளத்தை வழங்குவதற்கும், அவர்களை ஈடுபடுத்துவதற்கும், நகரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புதிய பங்குடமைகளை ஸ்தாபிப்பதற்கும், ஆற்றலுடைய அனுசரணையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை அணிதிரட்டுவதற்கும், மதிப்புமிக்க அறிவை அதிகரிப்பதற்கும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம், என Roads to Rights இன் ஸ்தாபகர் அஷான் பெரேரா தெரிவித்தார்.

தன்னார்வ உலக வரைபடத்தில் இலங்கை முதலிடத்தில் இருப்பது இந்த நிகழ்வுக்கு மேலும் மதிப்பை வழங்குகின்றது. அந்த வகையில் Road to Rights, இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்கள், இளைஞர்களால் வழிநடாத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து இதனை வருடாந்த இலாபநோக்கற்ற நிகழ்வாக நடாத்த எதிர்பார்க்கின்றது, என அஷான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

மோதல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் போன்றவை தொடர்பான கலந்துரையாடல்களில் இளைஞர்கள் பெரும்பாலும் உள்வாங்கப்படுவதில்லை. எனவே, இதுபோன்ற முயற்சிகளின் ஊடாக, Road to Rights இளைஞர்களை சமாதான உரையாடல்களிலும், அரசசார்பற்ற நிறுவனங்கள், இலாபநோக்கற்ற அமைப்புகள், சமூகப் பொறுப்பு செயற்திட்டங்கள் மற்றும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் செயற்படும் மனிதாபிமான திட்டங்கள் போன்றவற்றில் ஈடுபடுத்த முயற்சிகளை எடுத்து வருகின்றது. மேலும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் தமது செயற்பாடுகளை இளம் மற்றும் அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் எஸ்.டி.ஜி செயற்பாட்டாளர்கள் என பல தரப்பினர்களுக்கு தமது முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அமைதி மற்றும் பேண்தகு அபிவிருத்தியின் பொருட்டு மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் வாய்ப்புகளை உருவாக்குதல், திறன் மேம்பாடு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இளையவர்களை ஆதரித்தல் மற்றும் வலுவூட்டலை நோக்கமாகக் கொண்டு 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட விருது பெற்ற இளைஞர் தலைமையிலான அமைப்பு ஆகும்.