பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் சிறந்த முதல் மூன்று நிறுவனங்களுக்குள் மீண்டுமொருமுறை இடம்பிடித்த HNB

பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் சிறந்த முதல் மூன்று நிறுவனங்களுக்குள் மீண்டுமொருமுறை இடம்பிடித்த HNB

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையற்ற பின்னணியிலும் இலங்கையிலுள்ள வங்கித்துறையில் தமது சிறப்பையும் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களைக் கொண்டுள்ள சிறந்த நன்மதிப்பை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தி நாட்டின் சிறந்த பிரபல்யமான வாடிக்கையாளர் வங்கியான HNBஐ பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் அறிவிக்கப்பட்ட இலங்கையின் சிறந்த 30 (Business Today Top 30) நிறுவனங்கள் தரவரிசையில் முன்னணியில் உள்ள முதல் மூன்று நிறுவனங்களுக்குள் தரப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் தரப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட அனைத்து நிறுவனங்களும் அவர்களது வளர்ச்சியின் தாம், நிறுவன ரீதியான நிர்வாகம் மற்றும் முன்னோக்கிய சிந்தனை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டு காலப்பகுதியில், HNBஇன் பலமான நிதி நடவடிக்கைகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகைமைகளை அறிமுகப்படுத்துவதற்கு உள்ள சந்தர்ப்பம், விசேட வங்கிச் சேவைகள் போன்ற விடயங்களும் பிஸ்னஸ் டுடே டொப் 30 புதிய தரப்படுத்தலில் முன்னணி நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களுக்குள் தரப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது.

“பிஸ்னஸ் டுடே சிறந்த நிறுவனங்கள் 30க்குள் முதல் மூன்று தரத்திற்குள் பிரவேசிக்க கிடைத்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் பல தசாப்த காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பலமான வங்கிக் கட்டமைப்பாக நாம் இஸ்தாபித்துள்ளோம். இம்முறை பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் முன்னணி நிறுவனங்கள் மூன்றுக்குள் இருப்பதன் மூலம் எமது வங்கி பிரவேசித்துள்ள மாற்று நடவடிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.”

“கொவிட் தொற்றுநோயுடன் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான மாற்றங்கள் மற்றும் சவால்களை சிறந்த விதத்தில் எதிர்கொள்வதற்காக புதிய பொதுவான நிலைமைக்கு விரைவாக மாற்றமடைந்து எமது வாடிக்கையாளர் பெருமக்களை பாதுகாப்பதற்கும் மற்றும் இலகுவாக கொடுக்கல் வாங்கள் செய்வதற்கும் மற்றும் வங்கிச் சேவைகளுக்கு பிரவேசிக்க வைக்க எமது டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்தியுள்ளோம்.”

“எந்தவொரு நிறுவனமும் நிலையான மேம்பாடு அடைய மற்றும் எவ்வித தடைகளும் இன்றி பயணிப்பதற்கு புத்தாக்கங்கள் மற்றும் புதிய சிந்தனைகள் அத்தியாவசியமானது. அதன்படி, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற மற்றும் அசௌகரியமான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் இருக்கும் போதும், எதிர்வரும் வருடங்களில் HNB மேலும் வளமாக்க வங்கியியலில் புதிய வழிகளை ஆய்வுசெய்ய நாம் எதிர்பார்த்துள்ளேன்” என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.

பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலுக்கு மேலதிகமாக, HNB தமது மாற்றமடைந்த வங்கியியல் மூலம் கௌரவ விருதுகள் பலவற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் மதிப்பு வாய்ந்த ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகளுக்குள் HNB தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலங்கையிலுள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனம் (International Chamber of Commerce, Sri Lanka) மற்றும் பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனத்தினால் (CIMA) இலங்கையில் ‘மிகவும் மதிக்கத்தக்க நிறுவனங்கள் 10’இக்குள் HNB பெயரிடப்பட்டது. HNBஇன் சிறப்பை பிரபல்யப்படுத்திய மற்றுமொரு சந்தர்ப்பமாக இலங்கையிலுள்ள அனைத்து வங்கிகளையும் விஞ்சும் வகையில் LMD சஞ்சிகையினால் Top 100 Clubக்குள் உள்ளடங்குவதற்கு வங்கிக்கு முடிடிந்துள்ளதுடன் கடந்த 25 வருடங்களுக்குள் ஒரு நிறுவனத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2020 குளோபல் ஃபைனான்ஸ் விருது வழங்கும் நிகழ்வில் Best Sub-Custodian வங்கியாக HNBக்கு விருது வழங்கப்பட்ட இந்த விருது, 2018 முன்னர் பன்னாட்டு வங்கிகளால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவில் HNB வெற்றியாளராக இந்த விருதுக்கு தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக தகுதி பெற்றது

சிறந்த அம்சமாகும். அத்துடன் ஏசியன் பேங்கர் சஞ்சிகையினால் 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக HNB விருதுக்கு தகுதி பெற்றமை மற்றும் HNB 2019ஆம் ஆண்டுக்கான Best Corporate Citizen Sustainability என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தமை வங்கி வென்றெடுத்த ஏனைய விருதுகளுக்குள் சிறந்ததாக அமைந்தது. சர்வதேச கடன் தர வரிசையை பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியாக HNBக்கு அண்மையில் Fitch ratingsஇனால் HNBக்கு தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் அதன்போது Fitch ratingsஇன் இரண்டு படிகளால் முன்னோக்கிச் சென்று ‘AA+(lka)’ கடன் தரத்தினை பெற்றுக்கொள்வதற்கு வங்கியால் முடிந்மை விசேட அம்சமாகும்.